பணக்காரர்கள் ஏன் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள், ஏழைகள் மேலும் ஏழை ஆகிறார்கள்? ஏன் தெரியுமா?

#people #poor man
Prasu
10 months ago
பணக்காரர்கள் ஏன் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள், ஏழைகள் மேலும் ஏழை ஆகிறார்கள்? ஏன் தெரியுமா?

எல்லா பணக்காரர்களும் ஒரு காலத்தில் பணம் இல்லாதவர்களாக இருந்தவர்கள் தான். எல்லா பணக்காரர்களும் எதோ ஒரு காலத்தில் மொத்த பணத்தையும் இழந்து பூஜியத்திற்கு வந்தவர்கள் தான்.

ஆனாலும் எது அவர்களை மிகப்பெரிய செல்வந்தர் ஆக்கியது? உண்மையில் பணக்காரர் என்பதோ ஏழை என்பதோ அவர்கள் வைத்திருக்கும் பணத்தை பொறுத்தது அல்ல. அவர்கள் அந்த பணத்தை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதை பொறுத்தது.

பணக்காரர் பணத்தை உபயோகப்படுத்துகிரார்.ஏழை அதை செலவு செய்கிறார். ஒரு பணக்காரர் மற்றும் ஒரு ஏழை இருவருக்கும், ஆளுக்கு 3000 கொடுத்தோம் என்றால், ஒரு பணக்காரர், அவரது தன்மையை, அவரது திறமையை மேலும் அதிகரிக்க செய்யும் ஒரு பயிற்சியில் செலவிடுவார் அல்லது வேறு எதேனும் ஒரு முதலீடு செய்வார்.

 ஆனால் எழையோ, அந்த மாதத்தொடு முடிவடையும் ஒரு செலவினை செய்வார். அந்த மாத முடிவில், இருவர் கையிலும் அந்த ₹3000 இருக்காது. ஆனால் பணக்காரர் அந்த ₹3000 உபயோக படுத்தி பல லட்சம் பணத்தை அது குவித்து தரும் தன்மையை பெற்றிருப்பார். 

 ஏழையோ அதை செலவு செய்துவிட்டு, அதே நிலையிலேயே இருப்பார். உண்மையில் நான் அனைவரும் பணக்காரர் ஆகவேண்டும் என்று நினைக்கிறோம் ஆனால் நமது செயல் எழையுடையதாக இருந்தால் நாம் பணக்காரர் ஆக முடியாது.