நேருக்கு நேர் ஒரு கூண்டுச் சண்டைக்கு தயாரா? - எலன் மஸ்க்

#Facebook #Twitter #Zuckerberg #ElonMusk
Prasu
2 years ago
நேருக்கு நேர் ஒரு கூண்டுச் சண்டைக்கு தயாரா? - எலன் மஸ்க்

மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையில் இயங்கி வரும் முகநூல் எனப்படும் பேஸ்புக் (Facebook) மற்றும் எலான் மஸ்க் தலைமையில் இயங்கி வரும் நுண்வலைப்பதிவு நிறுவனமான டுவிட்டர் (Twitter) ஆகியவை அமெரிக்காவில் இயங்கி வருகிறது.

இதன் நிறுவனர்களுக்கிடையே அவ்வப்பொழுது சமூக வலைதளங்களில் வாக்குவாதங்கள் நடைபெறுவதுண்டு. சமீபத்தில் டுவிட்டருக்கு போட்டியாக முகநூல் நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. 

இதை உற்றுக் கவனித்து வந்த டுவிட்டர் ஆதரவாளர் ஒருவர், ''ஜூக்கர்பெர்க், ஜூ ஜிட்சூ எனப்படும் தற்காப்புக்கலை அறிந்தவர். சமீபத்தில் ஒரு போட்டியில் வென்றவர்" எனவே கவனமாக இருக்க வேண்டும் என்று மஸ்க்கை எச்சரித்தார்.

இதை ஒரு வேடிக்கையாக எடுத்துக் கொண்ட எலான் மஸ்க் ''நேருக்கு நேர் ஒரு கூண்டுச் சண்டையை விரும்புவதாகவும், அதற்கு அவர் தயாரா?'' என மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு அழைப்பும் விடுத்திருக்கிறார்.

 இதற்கு பதிலளித்த மார்க் ஜூக்கர்பெர்க், "இடத்தை தெரிவிக்கவும்" என எதிர்கோரிக்கை விடுத்திருக்கிறார். இவர்கள் இருவருக்கிடையேயான இந்த உரையாடல்கள், சமூக வலைத்தளங்களில் பயனாளிகளின் பல சுவாரஸ்யமான கருத்துக்களுக்கு வழி வகுத்திருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!