நெதர்லாந்தில் மோசமான வானிலை காரணமாக விமானச் சேவைகள் பாதிப்பு

#Flight #people #world_news #HeavyRain #ImportantNews #Netherland
Mani
3 years ago
நெதர்லாந்தில் மோசமான வானிலை காரணமாக விமானச் சேவைகள் பாதிப்பு

கடந்த சில நாட்களாக நெதர்லாந்தின் பல பகுதிகளில் பலத்த இடி-மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகள் மழைநீரில் மூழ்கி வெள்ளக்காடாக மாறின. பொதுமக்கள் அவசியமின்றி வீட்டினை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வானிலை மையத்தின் எச்சரிக்கை காரணமாகத் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டி இருந்த 37-க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஆம்ஸ்டர்டாம் வரக்கூடிய சர்வதேச விமானங்களின் சேவையை ரத்து செய்து அண்டை நாடுகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. நெதர்லாந்து வானிலை நிலைமை சீராகும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என அந்த நாட்டின் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4