இன்று மாலை லியோ படத்தில் ‘நா ரெடி’ பாடலை வெளியாகிறது படக்குழு!

#Cinema #Actor #Actress #TamilCinema #Director #Vijay #Tamilnews #ImportantNews #Movies
Mani
2 years ago
இன்று மாலை லியோ படத்தில் ‘நா ரெடி’ பாடலை வெளியாகிறது படக்குழு!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லியோ. இப்படத்திற்கு செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி மற்றும் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

லியோ படத்தின் முதல் பாடலான "அல்டர் ஈகோ நா ரெடி" விஜய் பிறந்தநாளான ஜூன் 22 அன்று வெளியிடப்படும் என்று போஸ்டர் அறிவித்தது. விஜய் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் லோகேஷ் கனகராஜ், "நா ரெடி" பாடலுக்கான விளம்பர வீடியோவை வெளியிட்டார். சரியாக நள்ளிரவில் 12 மணி அளவில் "லியோ" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார்.

விஜய்யே பாடியிருக்கும் "அல்டர் ஈகோ நா ரெடி" பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவித்து இரண்டாவது போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அவரது பிறந்தநாள் குறித்த தொடர்ச்சியான அப்டேட்டுகள் வருவதால் விஜய்யின் ரசிகர்கள் உற்சாகமாகவும் உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!