இரவு நேர காளியாட்ட நிகழ்வு: தடை குறித்து வெளியான தகவல்
#SriLanka
Mayoorikka
2 years ago
இரவு நேரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை திருத்தப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அதன்படி வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அதிகாலை 1.00 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பகல் 12.30 மணி வரையிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும் எனவும், மத ஸ்தலங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் தூரம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.