கவர்ச்சியான ஆடைகளை அணிந்த மருமகள் மீது சூடான எண்ணெயை ஊற்றிய மாமனார்

#China #Arrest #Women #Hospital
Prasu
2 years ago
கவர்ச்சியான ஆடைகளை அணிந்த மருமகள் மீது சூடான எண்ணெயை ஊற்றிய மாமனார்

மாமனார் ஒருவர், குட்டையான ஆடைகளை அணிந்த தனது மருமகள் மீது சூடான எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த பகுதியில் வசிக்கும் குடும்பத்தில் பெண் ஒருவர் குட்டையான ஆடைகளை அணிவதற்கு அவரது மாமானார் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். அத்துடன், மருமகளிடம் குட்டையான ஷார்ட்ஸ் அணிய வேண்டாம் என்றும் மாமனார் கடிந்து வந்துள்ளார்.

இதனால், சினமடைந்த குறித்த பெண் தனக்கு ஆடை சுதந்திரம் வேண்டும் என்று பதிலளித்துள்ள நிலையில் ஆத்திரமடைந்த மாமனார் மருமகள் மீது சூடான எண்ணெயை ஊற்றியுள்ளார்.

இது தொடர்பாக அந்த தந்து கணவரிடம் முறையிட்டுள்ள நிலையில், அதற்கு அவரது கணவரும் ஏதும் கூறாது தந்தைக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த பெண் , தனது கணவரை விவாகரத்து செய்வதற்கு எண்ணியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!