ரஷ்யாவில் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் பலி

#Death #Accident #Weapons #Russia #Factory
Prasu
2 years ago
ரஷ்யாவில் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் பலி

ரஷிய தலைநகர் மாஸ் கோவின் தென் கிழக்கே உள்ள தம்போவ் பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது.

இதில் 4 தொழிலாளர்கள் பலியானார்கள். 12 பேர் காயமடைந்தனர். வெடிவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. 

இது பயங்கரவாத தாக்குதல் அல்ல என்று தம்போவ் கவர்னர் மாக்சிம் யெகோரோவ் தெரிவித்தார்.

 உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் சில நாட்களாக ரஷியாவின் ஆயுத கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!