அதிக வாடகை அறவிடும் கரைச்சி பிரதேச செயலகம்: கிளிநொச்சி வர்த்தகர்கள் விசனம்
கிளிநொச்சியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு கரைச்சி பிரதேச சபையினால் அதிக வாடகை அறவிடப்படுவதினால் அதிகளவான வர்த்தகர்கள் பாதிக்கப்படுவதாக கிளிநொச்சி வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞ்ஞானம் சிறிதரன் ஆகியோருக்கு மனு ஒன்றையும் அவர்கள் கையளித்துள்ளனர்.
கரைச்சி பிரதேச சபையினால் முன்னர் மாதாந்த கட்டணமாக 6 ஆயிரம் ரூபா அறவிடப்பட்டதாகவும் தற்போது 7 ஆயிரம் ரூபா வரை அறவிடப்படுவதாகவும் கிளிநொச்சி வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்காரணமாக பல வர்த்தக நிலையங்கள் மூடப்படும் நிலை காணப்படுவதற்காகவும் வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தாங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டைந்து உறவுகளையும் உடமைகளையும் இழந்து வாழ்கின்றோம் அதோடு கண்பார்வை அற்றவர்கள் முன்னாள் போராளிகள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் போன்றோர் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதால் கரைச்சி பிரதேச சபையின் செயலாளரினால் மேற்கொள்ளப்படும் மாதாந்த கட்டண அதிகரிப்பினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே குறித்த கட்டண அதிகரிப்பை கருத்தில் கொண்டு அதனை குறைக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.


