ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்த பெண் கைது
#SriLanka
#Arrest
#Women
#sri lanka tamil news
Prathees
2 years ago
ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2,675,000 ரூபாவை ஏமாற்றிய பெண்ணொருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய சந்தேகநபருக்கு எதிராக தனக்குக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு எதிராக ஆஜராக வந்த நிலையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகளால் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் முன்னர் கைது செய்யப்பட்டு களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.