எந்த தைரியத்தில் பேசுகிறீர்கள் சபையில் கொந்தளித்த ஜீவன் தொண்டமான் (வீடியோ இணைப்பு)
#SriLanka
#Parliament
#JeevanThondaman
Soruban
2 hours ago
சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரில் ஞாபகார்த்த மண்டபம் உருவாக்கியது சாபக்கேடு ஆளும் தரப்பின் மலையக பிரதிநிதி குறிப்பிடுகிறார். பிரஜாவுரிமை பெற்றுக்கொடுத்த காரணத்தால் தான் சபைக்கு வந்து வாய்கிழிய பேசுகிறார்கள். மலையக பிரதிநிதி வந்த வழியை மறந்து விட்டார். முன்னாள் தலைவர்களை சாபம் என்று பேசுவது வீரம் என்று மலையக பிரதிநிதிகள் கருதலாம் அது உண்மையில் வீரமல்ல,அது அரசியல் சுயநலம் மற்றும் தலைகணத்தால் வரும் முட்டாள்தனம்.மலையகம் இன்று பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.