யாழ். நகரில் மருத்துவர் இருவர் வீடு மீது குண்டுத்தாக்குதல்
#SriLanka
#Attack
#doctor
#Home
#Lanka4
#வீடு
#இலங்கை
#தாக்குதல்
#லங்கா4
#மருத்துவர்கள்
Mugunthan Mugunthan
2 years ago
யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள வைத்தியர்கள் இருவர் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் நபர் எவருக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதுடன் தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் இருவர் வைத்தியர் என்று குறிப்பிட்ட னர்.
பொலிஸார், காணி பிணக்கு ஒன்றை வைத்து இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வருவதாகவும் தெரிவித்தனர்.