சட்டவிரோதமாக இயங்கி வந்த சுரங்கம் இடிந்து விழுந்ததில் இருவர் பலி

#Death #Accident #Hospital #Rescue #Mine
Prasu
2 years ago
சட்டவிரோதமாக இயங்கி வந்த சுரங்கம் இடிந்து விழுந்ததில் இருவர் பலி

ரக்வானையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சுரங்கம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ரக்வானை - மாதம்பே பிரதான வீதியில் மாதம்பே தோட்ட இலக்கம் 01 பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத சுரங்கமே இவ்வாறு சரிந்து வீழ்ந்துள்ளது. இந்த சட்டவிரோத சுரங்கம் நீண்டகாலமாக இயங்கி வந்த நிலையில், நேற்று (15) இரவு திடீரென சுரங்கம் சரிந்து விழுந்துள்ளது.

விபத்தின் போது சுரங்கத்தில் 04 பேர் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும் இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு, கஹவத்தை ஆரம்ப வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரக்வானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!