அரச மருந்தாளர் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவு
PriyaRam
2 years ago
அரச மருந்தாளர் சங்கத்தினால் நேற்றுஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (17) காலை 08.00 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்காவிட்டால் எதிர்காலத்தில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச மருந்தாளர் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ கூறியுள்ளார்.
மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் 23 மருந்தாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிராக இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால், பல வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்கு தடை ஏற்பட்டதுடன், நோயாளர்கள் சிரமத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.