தொல்பொருள் திணைக்களத்தினருக்கு ஜனாதிபதி விடுத்த பணிப்புரை!
இலங்கையின் முதலாவது குடியேற்றமாக எழுத்து மூலமான சாட்சியங்களால் அறியப்பட்ட மல்வத்து ஓயா, மகா விகாரை பிரதேசம் மற்றும் சீதாவக்க இராச்சியத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விஞ்ஞான ஆய்வுகளை ஆரம்பிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
இந்தப் பகுதிகளை மீள் ஆய்வு செய்து தொல்பொருள் சிதைவுகள் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களை அடையாளம் காண ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இதன்படி தொல்பொருள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் எதிர்காலத்தில் இந்த நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளார்.
கோட்டே ராஜதாரிணியின் இடிபாடுகளை மீள் ஆய்வு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும், ஏற்கனவே அப்பகுதி மக்கள் அதிகம் வசிக்கும் பிரதேசம் என்பதால் அது சாத்தியமாகவில்லை என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, திரியா கோவிலுக்கு அருகிலுள்ள துறைமுகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புகள் மற்றும் திரியாவிலிருந்து ஹொரோவ்பதான வரையிலான நீர் மற்றும் தரைவழிப் பாதையின் விரிவான ஆய்வும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும்.