அறுவை சிகிச்சைக்கு பின் வைத்தியசாலையை விட்டு வெளியேறிய போப் ஆண்டவர்

#Hospital #Pop Francis #Surgery
Prasu
2 years ago
அறுவை சிகிச்சைக்கு பின் வைத்தியசாலையை விட்டு வெளியேறிய போப் ஆண்டவர்

போப் ஆண்டவர் பிரான்சிஸ் குடல் அடைப்பு மற்றும் வலியால் அவதிப்பட்டு வந்தார். எனவே கடந்த 7-ந் தேதி இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அவரது உடல்நலம் வேகமாக தேறி வருவதாக டாக்டர்கள் கூறினர்.

இந்தநிலையில் ஆபரேஷன் முடிந்த 9 நாட்களுக்கு பிறகு நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வாடிகன் திரும்பினார். 

அவர் முன்பை விட தற்போது நலமுடன் உள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் செர்ஜியோ அல்ச்பீரி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!