டோங்கா தீவு அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவு

#world_news #Earthquake #Breakingnews
Mani
3 years ago
டோங்கா தீவு அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவு

தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா தீவு அருகே, சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, இந்த நிலநடுக்கம் டோங்காவின் தென்மேற்கே 280 கிமீ (174 மைல்) தொலைவில் 167.4 கிமீ (104 மைல்) ஆழத்தில் அமைந்திருந்தது.

அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பின்படி, நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் மேற்கு கடற்கரை, பிரிட்டிஷ் கொலம்பியா அல்லது அலாஸ்காவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை.

 பிஜி தீவுகளின் தெற்குப் பகுதியில் 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்திருந்தது அறிவித்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4