டிக் டொக் பெண்ணை ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுத்த இராணுவ வீரர் கைது

#SriLanka #Arrest #Police #Sexual Abuse #TikTok
Prathees
2 years ago
டிக் டொக் பெண்ணை ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுத்த இராணுவ வீரர் கைது

முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் நிர்வாண காணொளிகளை வெளியிடுவதாக கூறி 17 வயதுடைய பாடசாலை மாணவியை அச்சுறுத்திய நபர் தொடர்பில் கடந்த 11ஆம் திகதி மாணவி கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 பொலிசார் நடத்திய விசாரணையில்  டிக் டொக் சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட ஒருவருடனான நட்பின் அடிப்படையில் குறித்த நபர் மாணவியிடம் நிர்வாண வீடியோ அழைப்பைக் எடுக்குமாறு கோரியுள்ளார்.

 அதன்படி அந்த மாணவி கோரிக்கையை நிறைவேற்றி வீடியோ கோல் செய்துள்ளார்.

 அப்போது, ​​அந்த அழைப்பு, அவரது மொபைல் போனில் ஸ்கிரீன் ரெக்கார்டு செய்யப்பட்டு, மீண்டும் அவருக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 மீண்டும் இவ்வாறு நிர்வாணமாக வீடியோ கோல் செய்யுமாறும் இல்லையேல் வீடியோவை ஃபேஸ்புக்கில் வெளியிடுவோம் என மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 சந்தேகநபர் மின்னேரிய இராணுவ முகாமில் பணிபுரியும் இராணுவ சிப்பாய் என தெரியவந்ததையடுத்து, கடந்த ஜூன் 14ஆம் திகதி முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று சந்தேக நபரை கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததுடன் பொலிசார் அவரை கைது செய்தனர்.

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 19 வயதுடைய புருந்தம்கம, மிஹிந்தலை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

 சந்தேகநபர் மற்றும் முறைப்பாட்டாளரின் கையடக்கத் தொலைபேசிகள் விசாரணைக்காக பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் நேற்று 15,000 ரூபா  பிணையிலும், தலா 100,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

 இந்த வழக்கு வரும் 18ம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!