டொலரின் பெறுமதி அதிகரிப்பு குறித்து நிதி ராஜாங்க அமைச்சர் வெளியிட்ட கருத்து!
#SriLanka
#Dollar
Mayoorikka
2 years ago
டொலரின் பெறுமதி அதிகரிப்பு குறித்து அச்சப்பட தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வழங்கல் மற்றும் தேவைக்கேற்ப டொலரின் விலை தீர்மானிக்கப்படுவதாக தெரிவித்த ரஞ்சித் சியம்பலாபிட்டிய, இறக்குமதி அதிகரிக்கும் போது ஒரு வாரத்தில் டொலருக்கான தேவை அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.
மத்திய வங்கி மூன்று பில்லியன் டொலர்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் அவ்வாறு செய்யாவிட்டால் டொலர் மேலும் வீழ்ச்சியடையும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.