அரச வைத்தியசாலைகளிலுள்ள CT ஸ்கேன் இயந்திரங்கள் முழுமையாக செயலிழந்துள்ளது

#SriLanka #Hospital #Lanka4
Kanimoli
2 years ago
அரச வைத்தியசாலைகளிலுள்ள CT ஸ்கேன் இயந்திரங்கள் முழுமையாக செயலிழந்துள்ளது

அரச வைத்தியசாலைகளிலுள்ள CT ஸ்கேன் இயந்திரங்களில் பத்திற்கும் மேற்பட்டவை முழுமையாக செயலிழந்துள்ளதாக அரச கதிரியக்க தொழிநுட்ப அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, குருநாகல், கராப்பிட்டிய, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளில் இருக்கும் CT ஸ்கேன் இயந்திரங்களே இவ்வாறு செயலிழந்துள்ளதாக சங்கத்தின் தலைவரான ஜானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.

 3 வைத்தியசாலைகளிலுள்ள CT ஸ்கேன் இயந்திரங்களில் முழுமையான பயனை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக அரச கதிரியக்க தொழிநுட்ப அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான ஜானக்க தர்மவிக்ரம கூறியுள்ளார்.

 அரச வைத்தியசாலைகளில் தற்போது 43 CT ஸ்கேன் இயந்திரங்கள் மாத்திரமே செயற்பாட்டில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதனால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நோயாளர்களை அடையாளப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!