சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் விமான போக்குவரத்து சேவை தொடக்கம்!

#India #Flight #Airport #Tamilnews #ImportantNews #Chennai
Mani
3 years ago
சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் விமான போக்குவரத்து சேவை தொடக்கம்!

1,36,295 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள சென்னை அண்ணா சர்வதேச ஒருங்கிணைந்த புதிய விமான நிலையத்தின் முதல் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8ஆம் தேதி திறந்து வைத்தார். சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் கையாளப்படுகின்றனர். புதிய முனையம் மூலம் 30 மில்லியன் பயணிகளை கையாளும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25ந் தேதி முதல் சோதனை ஒட்டம் தொடங்கியது. பின்னர் விமான நிலையத்தில் கூடுதலாக சில அபிவிருத்திப் பணிகள் செய்யப்பட்டன.

மே மாதம் 3ந் தேதியில் இருந்து சோதனை முறையில் சில விமானங்கள் புதிய முனையத்தில் இயக்கப்பட்டன. ஆனால் சிறிய ரக விமானங்களான ஏர் பஸ் 320, 321 மற்றும் போயிங் ரக 737, 738 விமானங்கள் மட்டுமே சோதனை அடிப்படையில் வந்து சென்றன. குவைத், இலங்கை, எத்தியோப்பியா நாடுகளுக்கும் சோதனை முறையில் இயக்கப்பட்டன.

இன்று முதல், இந்த புதிய முனையம் 180 முதல் 194 இருக்கைகள் வரையிலான நடுத்தர அளவிலான விமானங்களை இயக்கும். முதற்கட்டமாக கொழும்பு, சிங்கப்பூர், துபாய், தமாம், மஸ்கட், தோஹா, குவைத், மலேசியா, அபுதாபி ஆகிய நாடுகளுக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன பன்னாட்டு விமானங்கள் இயக்கப்படும் என விமான நிலைய ஆணையகம் அறிவித்து உள்ளது. ஜூலை மாதத்திற்குள் புதிய ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையம் முழு அளவில் செயல்பட இருக்கிறது. அப்போது இந்த முனையங்களில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய ரக விமானங்கள் அனைத்தும் இயங்கத் தொடங்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4