ஆறு வயதுடைய பாடசாலை மாணவரொருவர் தனது வீட்டின் கழிவறையில் தற்கொலை
#SriLanka
#Death
#Student
#Lanka4
Kanimoli
2 years ago
ஆறு வயதுடைய பாடசாலை மாணவரொருவர் தனது வீட்டின் கழிவறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பத் பண்டார இதனைத் தெரிவித்தார். பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 5ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அவர் கழிவறைக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மாணவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திக்ஓயா ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பக்வந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.