பேராதனையில் புதிய மாணவர்களுக்கு சோறு ஊட்டிய சம்பவம்: 11 மாணவர்களுக்குக்கு வகுப்புத்தடை
#SriLanka
#Lanka4
#students
#sri lanka tamil news
#University
Prathees
2 years ago
பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேர் புதிய மாணவர்களை ரைஸ் குக்கரால் தாக்கிய சம்பவம் தொடர்பில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இடைநிறுத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் பீடத்திற்குள் நுழைந்த புதிய மாணவர்களை கடந்த 5 ஆம் திகதி விடுதிக்கு அழைத்துச் சென்று கெட்டுப்போன மற்றும் அழுகிய சோற்றை ஊட்டி, கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வகுப்புத்தடை நேற்று முன்தினம் (10ஆம் திகதி) முதல் தற்காலிகமாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், முறையான விசாரணை நடத்தப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறித்த பல்கலைக்கழகத்தின் பிரதிவேந்தர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.