காதலியை கொன்று கழிவுநீர் தொட்டியில் அப்புறப்படுத்திய கோவில் பூசாரி

#India #Death #Tamilnews #Breakingnews #Died #ImportantNews
Mani
1 year ago
காதலியை கொன்று கழிவுநீர் தொட்டியில் அப்புறப்படுத்திய கோவில் பூசாரி

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஷரூர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாகரி வெங்கட் சூர்யா சாய் கிருஷ்ணா. 36 வயதான இவர் அப்பகுதியில் உள்ள பங்காரு மைசம்மா கோயிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தை உள்ளது. இந்தநிலையில், நற்குடா கிராமத்தைச் சேர்ந்த ன்ற பெண் அடிக்கடி கோயிலுக்கு வரும்போது பூசாரி சாய் கிருஷ்ணாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததால் அப்சரா கர்ப்பமடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சாய் கிருஷ்ணாவின் கட்டாயத்தின் பேரில் அப்சரா கர்ப்பத்தை கலைத்துள்ளாத தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த சாய் கிருஷ்ணா அப்சராவை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளார். இதனையடுத்து, உடலை ஷரூர் நகர் எடுத்து வந்து அங்குள்ள கோயிலுக்கு அருகில் உள்ள கழிவு நீர்த் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். இதனிடையே, மகளை காணவில்லை என்று அப்சராவின் பெற்றோர் கடந்த 3 ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை கொடுக்கும் போது சாய் கிருஷ்ணாவும் உடனிருந்தனர்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்சராவை தேடி வந்தனர். இதனிடையே அப்சராவின் செல்போனை ஆய்வு செய்த போது சாய் கிருஷ்ணாவுடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை சாய் கிருஷ்ணா ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, சாய் கிருஷ்ணா கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஷரூர் நகர் கோயிலுக்கு பின்புறம் உள்ள கழிவுநீர்த் தொட்டியில் இருந்து அப்சரா உடலை கைப்பற்றினர். பின்னர், சாய் கிருஷ்ணாவை நேற்று கைது செய்தனர். பூசாரி செய்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!