மூன்று மாதங்களுக்குள் கோழி இறைச்சியின் விலையைக் குறைக்க முடியும்: கோழிப்பண்ணை உரிமையாளர்கள்

#SriLanka #prices #Chicken #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
மூன்று மாதங்களுக்குள் கோழி இறைச்சியின் விலையைக் குறைக்க முடியும்: கோழிப்பண்ணை உரிமையாளர்கள்

விவசாய அமைச்சருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் மூன்று மாதங்களுக்குள் ஒரு கிலோ கோழி இறைச்சியை ரூ.1200 ஆகக் குறைக்க முடியும் என கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

 ஒரு கிலோ கோழிக்கறியின் விலை ரூ.1,300 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையை குறைப்பதற்கு அமைச்சுடன் இணக்கப்பாட்டுக்கு வர முடியும் என அமைச்சருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த தொழில் அதிபர்கள் தெரிவித்தனர்.

 இந்த கலந்துரையாடலின் போது, டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையின் பயனை நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோழிப்பண்ணை உரிமையாளர்களிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

 இத்தொழிலைப் பாதுகாக்க அரசாங்கம் தேவையான சலுகைகளை வழங்கிய போதிலும் நுகர்வோருக்கு நன்மைகள் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 சீரற்ற காலநிலை காரணமாக மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கோழிக்கறிக்கான தேவை அதிகரித்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!