குளுகுளு கொடைக்கான‌லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அதனால் போக்குவரத்து நெரிசல்

#India #Tamil Nadu #Tourist #Tamil People
Mani
3 years ago
குளுகுளு கொடைக்கான‌லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அதனால் போக்குவரத்து நெரிசல்

விடுமுறை நாட்களில், கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். தற்போது, ​​தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், வெப்பத்தில் இருந்து தப்பிக்கவும், கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

இதனால், கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியில் இருந்து 8 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், சுற்றுலாப் பயணிகள் தாங்கள் விரும்பிய இடங்களுக்கு உடனடியாக செல்ல முடியாமல், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மலைப்பாதையில் ஊர்ந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கூடுதல் போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பது சுற்றுலா தொழில் புரிவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4