வருண் தேஜ் & லாவண்யா திரிபாதி ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது

பிரம்மன் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடித்திருந்தார். இந்த நேரத்தில், லாவண்யா திரிபாதி தெலுங்கு நடிகர் வருண் தேஜ்வுடன் காதல் செய்தார். இவர்கள் இதற்கு முன் 'மிஸ்டர்', 'அந்தாரிக்சம்' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்தச் சமயத்தில்தான் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.
வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. வருண் தேஜ் தந்தை, நடிகர் நாகபாபுவுடன், வருண் தேஜ் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்.திருமணம் முடிந்ததும் மணமக்கள் தனி குடித்தனம் சென்றுவிடுவார்கள், என்று கூறியிருந்தார்.
நேற்று வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி திருமண நிச்சயதார்த்தம் எதிர்பாராத விதமாக நடந்து முடிந்தது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவர்களது நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
நிச்சயதார்த்தத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி அதிகாரப்பூர்வமாக செய்தியை அறிவித்தனர். வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி ஜோடிக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



