இனி திருமண போட்டோஷூட் ரயில் நிலையங்களில் கூட எடுக்கலாம்!

#wedding #Railway #Development #Tamilnews #Breakingnews #Station #Photo
Mani
3 years ago
இனி திருமண போட்டோஷூட் ரயில் நிலையங்களில் கூட எடுக்கலாம்!

ரயில் நிலையம் ரயில் பெட்டிகளில் தனிநபர் மற்றும் வணிக பயன்பாட்டிற்காக போட்டோ மற்றும் வீடியோ எடுக்க தெற்கு ரயில்வே கட்டணங்களுடன் அனுமதி

தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் வணிகம் கல்வி திருமணம் ரீதியான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் எடுக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்து வருகிறது.

அந்தவகையில் போட்டோ மற்றும் வீடியோ எடுக்கப்பட வேண்டிய நிலையத்தில் உள்ள அதிகாரியை அணுகி விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் ரயில் நிலையத்தில் பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் அந்த ரயில் நிலையத்திற்கு அதிகாரி அனுமதி அளிப்பார், ஒருவேளை வாடிக்கையாளர் கோரப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பாதுகாப்பு சரியில்லை என்றால் அங்கு அனுமதி அளிக்கப்படாது

ரயில் நிலையத்திற்கு ஏற்ப கட்டணங்கள் மாறுபடும், நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்கள் செலுத்திய பின்னர் அனுமதி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4