கிளிநொச்சியில் 30ஆம் திகதி மூன்று கிராமங்களில் பாரிய அனர்த்த ஒத்திகை

#SriLanka #Kilinochchi #LANKA4 #Disaster #Village #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
கிளிநொச்சியில் 30ஆம் திகதி மூன்று கிராமங்களில் பாரிய அனர்த்த ஒத்திகை

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில், பாரிய அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள், அரச திணைக்களங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயற்படும் விதம் தொடர்பான அனர்த்த ஒத்திகை எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம், தட்டுவன்கொட்டி மற்றும் பரந்தன் ஆகிய மூன்று கிராமங்களை உள்ளடக்கி இந்த அனர்த்த ஒத்திகை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் பரந்தன் பொதுநோக்கு மண்டபத்தில், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ் தலைமையில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் A.M.R.N.K. அலஹகூன், கிளீன் ஸ்ரீலங்கா மாவட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன், வலயக் கல்விப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் மின்சார சபை பொறியியலாளர்கள், நீர்ப்பாசனப் பொறியியலாளர், இராணுவத்தினர், சுகாதாரத்துறையினர், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிராம சேவையாளர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பாரிய அனர்த்தங்களின் போது முன்னெச்சரிக்கை, அவசரகால ஒருங்கிணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஒத்திகை முன்னெடுக்கப்படவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!