ஆனி மாத பூஜை வரும் ஜூன் 15ம் தேதி ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

#Temple #spiritual #Tamilnews #Kerala #Special Day
Mani
3 years ago
ஆனி மாத பூஜை வரும் ஜூன் 15ம் தேதி ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் மண்டல பூஜைக்காக கோயில் நடை திறக்கப்படுகிறது. இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும்.

இந்த நிலையில் வைகாசி மாத மண்டல பூஜை வரும் ஜூன் 15ம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த 5 நாட்கள் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது. மேலும், ஜூன் 20-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

இந்த பூஜையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு கேரளா அரசு போக்குவரத்து சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4