அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஒரு கோடியே பதினேழு இலட்சம் ரூபாவை இழந்த பெண்கள்!

#SriLanka #money
Mayoorikka
2 years ago
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஒரு கோடியே பதினேழு இலட்சம் ரூபாவை இழந்த பெண்கள்!

கவா்ச்சிகரமான வட்டி தருவதாக கூறி ஒரு கோடியே பதினேழு இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கெஸ்பேவ நகரசபையின் முன்னாள் பெண் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

 சந்தேகநபரின் மோசடியில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவா்கள், பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த மோசடி இடம்பெற்றுவருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண்ணுக்கு எதிராக பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 பல்வேறு திட்டங்களுக்கு பணம் முதலீடு செய்யப்படுவதாகவும், பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்தியும் 3 லட்சம் முதல் 25 இலட்சம் ரூபா வரையில் மோசடி செய்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 மோசடி செய்த பணத்தைக் கோரும் போது அதனை வழங்க மறுத்து, மிரட்டுவதாகவும் முறைப்பாடுகளில் தொிவிக்கப்பட்டுள்ளது.

 கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர் பிலியந்தலை - மகுலுதுவ பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடையவர் என தொியவந்துள்ளது. சந்தேகநபரான பெண், கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!