தென் கொரியாவில் எஸ்கலேட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 14 பேர் காயம்!

#world_news #SouthKorea
Mani
3 years ago
தென் கொரியாவில் எஸ்கலேட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 14 பேர் காயம்!

தென்கொரியாவின் தலைநகர் சியோல் அருகே அமைந்துள்ள சியோங்னாம் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையை வழியாக பலர் சென்றனர். அந்த நேரத்தில், சில நபர்கள் எஸ்கலேட்டர் மூலம் ஏறிக் கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக எஸ்கலேட்டர் கீழே இறங்க ஆரம்பித்ததால் பயணிகள் நிலை தடுமாறி ஒருவர் மேல் ஒருவர் சரிந்து விழுந்தனர்.

 உடனடியாக தொழில்நுட்ப குழுவினர் அங்கு வந்து அதனை சரிசெய்தனர். இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 14 பேர் காயமடைந்தனர். மீட்புக் படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது, தற்போது அவர்களுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4