இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 2.5 கிலோ தங்கம் பறிமுதல். கடத்தல் காரர்களை தேடி வருவதாக சுங்கத்துறை செய்தி வெளியீடு

#SriLanka #Police #Fisherman #Robbery #Lanka4
Kanimoli
2 years ago
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 2.5 கிலோ தங்கம் பறிமுதல். கடத்தல் காரர்களை தேடி வருவதாக சுங்கத்துறை செய்தி வெளியீடு

இலங்கையில் இருந்து கடந்த திங்கள் கிழமை தங்கம் கடத்தி வருவதாக சுங்க துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடலில் ரோந்தில் பணி செய்து கண்காணித்து வந்தனர்.

 அப்போது மண்டபம் கடற்பகுதியை நோக்கி வந்த பைபர் படகு சுங்கத்துறை அதிகாரிகளை கண்டதும் படகினை உச்சிப்புளி அருகே நொச்சியூரணி கடற்பகுதியில் நிறுத்திவிட்டு தப்பியோடினர்.

 இந்நிலையில் படகினை ஆய்வு செய்ததில் சட்ட விரோதமாக கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 1.50 கோடி மதிப்பிலான 2.5 கிலோ கடத்தல் தங்கம் மற்றும் பைபர் படகினை மண்டபம் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும், 

தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருவதாக சுங்கத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!