கைதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த காவலருக்கு ஆயுள் தண்டனை

#SriLanka #Court Order #Prison #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
கைதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த காவலருக்கு ஆயுள் தண்டனை

சிறைக் கைதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த சிறைக் காவலர் ஒருவருக்கு கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து கடந்த 7ம் திகதி தீர்ப்பளித்தார்.

 சிறைச்சாலை காவலராக இருந்த அப்போது தெல்தெனிய பகுதியைச் சேர்ந்த நாற்பத்தைந்து வயதுடைய எம். ஜி. மாலக மிஹிர பண்டார என்பவருக்கே ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 போகம்பரை சிறைச்சாலை வளாகத்தில் இரண்டு கிராம் எண்ணூறு மில்லிகிராம் ஹெரோயினுடன் சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளால் குறித்த சிறைக்காவலர் கைது செய்யப்பட்டார். 

 ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிஇ வழக்கின் தீர்ப்பை அறிவித்து குற்றவாளிகளுக்கு தண்டனை விதித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!