அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த விகாரைகளில் பணத்தை திருடிய நபர் கைது
#Arrest
#Australia
#world_news
#Robbery
#Lanka4
Prathees
2 years ago
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை பௌத்த விகாரைகளில் பணத்தை திருடிய சந்தேக நபர் ஒருவர் அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
44 வயதான அவுஸ்திரேலிய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு பொலிஸாரால் பிணை வழங்க மறுக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
அடிலெய்டில் உள்ள கோவிலில் இருந்து 3000 ஆஸ்திரேலிய டாலர்களை சந்தேக நபர் திருடியுள்ளார்.
இதன்படி 18 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.