பெண் காவல் அதிகாரியை திருமணம் செய்வதாகக் கூறி ஒரு இலட்சம் ரூபா மோசடி செய்த கான்ஸ்டபிள்
#SriLanka
#Arrest
#Police
#Women
#money
Prasu
2 years ago
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஒரு இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிய பொலிஸில் பணிபுரியும் திருமணமானவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
2019 ஆம் ஆண்டு நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியபோது பொலிஸ் கான்ஸ்டபிளும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளும் காதலித்த நிலையில், குறித்த பெண் கான்ஸ்டபிளை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பணத்தை பெற்றுக்கொண்டு பெண் கான்ஸ்டபிளை ஏமாற்றியதாக வவுனியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரமே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.