ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
#Cinema
#Actor
#TamilCinema
Mani
2 years ago

ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்த இறைவன் என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக செய்திகள் வெளியானது என்பதும் தெரிந்தது. 'இறைவன்' படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இறைவன் திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளதோடு ரிலீஸ் தேதி உடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



