அல்வாய் வடமத்தியில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு
#SriLanka
#Death
#Lanka4
Kanimoli
2 years ago
அல்வாய் வடமத்தி, அல்வாய் மாவிலங்கடி வீயியில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்று (07) முற்பகல் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வேதார்வளவு, வியாபாரி மூலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சேதுராமலிங்கம் (வயது- 81) என்பவராவார்.
மேற்படி வயோதிபர் மாவிலங்கடி வீதியில் 12.30 மணியளவில் விழுந்து கிடந்ததை கண்ட இளைஞர் ஒருவர் அவரை எழுப்ப முற்பட்ட சமயம் அவர் அசைவற்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பருத்தித்துறை பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டு பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் ஒப்படைத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறை பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.