ஒலிபரப்பு அதிகார சபை சட்டத்திற்கு இலங்கை ஒலிபரப்பாளர்கள் மன்றம் எதிர்ப்பு

#SriLanka #Protest #sri lanka tamil news #wijayadasa rajapaksha
Prathees
2 years ago
ஒலிபரப்பு அதிகார சபை சட்டத்திற்கு இலங்கை ஒலிபரப்பாளர்கள் மன்றம் எதிர்ப்பு

 ஒலிபரப்பு ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டம் தொடர்பில் அமைச்சு உபகுழு முன்வைத்துள்ள பிரேரணைகளுக்கு நாட்டின் ஊடக நிறுவனங்களை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக இலங்கை ஒலிபரப்பாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது. 

 இது தொடர்பான பிரேரணையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவுடன் நேற்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

 ஒலிபரப்பு அதிகார சபை சட்டம் தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள பிரேரணைகள் ஊடக நிறுவனங்களின் கட்டுப்பாட்டை அரசாங்கத்திற்கு வழங்குவது போன்று இருப்பதாக இலங்கை ஒலிபரப்பாளர்கள் மன்றத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

 இலங்கை ஒலிபரப்பாளர்கள் சங்கம் தமது சங்கத்தினால் தயாரிக்கப்பட்ட புதிய பிரேரணையை 03 வாரங்களுக்குள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவும் இணக்கம் தெரிவித்துள்ளது. 

 ஊடகங்கள் தொடர்பான ஒழுங்குமுறையை விட இணை ஒழுங்குமுறையே இருக்க வேண்டுமென மன்றத்தின் பிரதிநிதிகள் உரிய கலந்துரையாடலில் சுட்டிக்காட்டியுள்ளனர். 

 அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ஷ, பந்துல குணவர்தன, நிமல் சிறிபாலத சில்வா, மனுஷ நாணயக்கார ஆகியோர் கலந்துகொண்டதுடன் இலங்கை ஒலிபரப்பாளர்கள் மன்றம் சார்பில் அதன் தலைவர் அசங்க ஜயசூரிய உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!