அமெரிக்க காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்ற தயாராகும் மோடி!

#India #America #world_news #D K Modi
Mayoorikka
2 years ago
அமெரிக்க காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்ற தயாராகும் மோடி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க காங்கிரஸில் (செனட் சபை ) உரையாற்ற தயாராகி வருகிறார்.

 அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 அதன்படி வரும் 22ம் திகதி இந்திய பிரதமர் அமெரிக்கா செல்கிறார். அங்கு அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோருடன் வெள்ளை மாளிகையில் சிறப்பு விருந்தில் கலந்து கொள்கிறார்.

 இதேவேளை, அமெரிக்க விஜயத்தின் போது இந்திய காங்கிரஸில் உரையாற்றுவதற்கு இந்தியப் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 அதன்படி அமெரிக்க பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் இந்திய பிரதமர் உரையாற்றவுள்ளார்.

 அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி தலைமையிலான பல காங்கிரஸ் தலைவர்கள் விடுத்த அதிகாரப்பூர்வ அழைப்பை இந்திய பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

 முன்னதாக, கிரேட் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி நெல்சன் மண்டேலா ஆகியோரும் அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றி சிறப்பு அறிக்கைகளை வெளியிட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!