சுவிட்சர்லாந்தில் வசிக்கும் சுஜந் -ஜெயபாலதி தம்பதிகளின் மகனின் 1வது பிறந்தநாள் நிகழ்வு
சுவிற்சர்லாந்து பேர்ன் மாநிலத்தில் வசிக்கும் சக்திகள் திரு. திருமதி. சுஜந் -ஜெயபாலதி தம்பதிகளின் செல்வப்புதல்வனின் 1 வது பிறந்தநாளான நேற்றையதினம் 05.06.2023 தமது செல்வப்புதல்வன் சக்தி சாயின் அவர்களது முதலாவது பிறந்த தினத்தை முன்னிட்டு வறுமைக்கோட்டின் கீழ் பாடசாலையில் கல்விகற்கும் மாணவச்செல்வங்களுக்கு மதியுணவாக பிரியாணியும் இனிப்பு மற்றும் பிஸ்கற் தின்பண்டங்களும் வாழைப்பழம் குளிர்பானங்களும் வழங்கிவைத்ததோடு மாணவர்கள் முன்னிலையில் அவருக்கான கேக்வெட்டிக் கொண்டாடப்பட்டது.
இதனை கல்முனை ஆதிபராசக்தி அறப்பணி மையத்தின் பொறுப்பார் சக்தி திரு. ரூபன் தலைமையில் அறப்பணியாளர்களும் இணைந்து விரைந்து செல்படுத்தினர் .
அவர்களுக்கு நன்றிகளைத்தெரிவிக்கும் அதேவேளை நிதியனுசரணை வழங்கிய பேர்ன் மன்றசக்திகளான சுவிற்சர்லாந்து சுமிஸ் வால்டில் வசிக்கும் சாயினின் பேரன் மற்றும் பேத்தியுமான சக்திகள் திரு . திருமதி நாகரெத்தினம் கோமளாம்பிகைக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறேன்




