39 இலட்சம் ரூபா மோசடி செய்த கண்டி சர்வதேச பாடசாலையின் பெண் காசாளர் கைது
#SriLanka
#Arrest
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago
கண்டியில் உள்ள பிரதான சர்வதேச பாடசாலை ஒன்றில் 39 இலட்சம் ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் (05) குறித்த பாடசாலையின் காசாளர் கண்டி தலைமையக காவல்துறையின் மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலைக்கு வெளிநாட்டு பரீட்சைக்கு மாணவர்களை அனுப்பும் திணைக்கள நிர்வாகத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சுமார் 02 வருடங்களாக இந்த பண மோசடியை செய்து வந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.