இறந்த மனைவியை தேடி சுயநினைவின்றி நடந்து சென்ற கணவன் குழியில் விழுந்து மரணம்: 6 நாட்களுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்

#SriLanka #Death #Police #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
இறந்த மனைவியை தேடி சுயநினைவின்றி நடந்து சென்ற கணவன் குழியில் விழுந்து மரணம்: 6 நாட்களுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்

இறந்த மனைவியைத் தேடி சுயநினைவின்றி நடந்து சென்றதாகக் கூறப்படும் கணவன் தனியார் காணி ஒன்றில் வெட்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்த நிலையில் 06 நாட்களுக்குப் பின்னர் சடலத்தைக் கண்டெடுத்ததாக எப்பாவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 எப்பாவல, யோத அலகம பகுதியைச் சேர்ந்த மூனா அழகன் என்ற 79 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

 கடந்த 1ஆம் திகதி மதியம் முதல் இந்த நபரை காணவில்லை என கடந்த 3ஆம் திகதி அவரது மகன் எப்பாவல பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

 இவரை கடந்த சில நாட்களாக தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில் நேற்று (06) பிற்பகல் பொஸ்பேட் காப்புக்காட்டில் விறகு வெட்டச் சென்ற நபர் ஒருவருக்கு துர்நாற்றம் வீசிய நிலையில் சில வருடங்களாக வெட்டப்பட்ட நிலையில் ஜல்லிக்கற்கள் குழியில் சடலமாக கிடந்துள்ளார். 

எப்பாவல பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் உடல் சுமார் 10 அடி ஆழமுள்ள பழைய சரளைக் குழியில் தலைகீழாக இருந்ததாகவும், அது மோசமாக சிதைந்து ஈக்கள் மற்றும் புழுக்களால் நிறைந்து காணப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

 இவரது மனைவி சுமார் 11 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும்இ அதன் பின்னர் அவர் அதிர்ச்சியில் இருந்ததாகவும்இ இறந்து போன மனைவி குறித்து அடிக்கடி கேட்டு வருவதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

 சம்பவ இடத்திற்கு வந்த தம்புத்தேகம நீதவான் புத்திக மல்வத்த, பொலிஸாருக்கு ஸ்தல பரிசோதனையை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!