யுக்ரேனில் அணை தகர்ப்பு; 100 சிறு நகரங்கள், கிராமங்கள் வெள்ளக்காடாயின!
#world_news
#WorldCup
#sports
#Tamilnews
#ImportantNews
#Tennis
#Sports News
Mani
2 years ago
உக்ரைனில் உள்ள நோவா ககோவ்கா அணை தகர்க்கப்பட்டு தண்ணீர் வெளியேறுவதால், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
டினிப்ரோ ஆற்றின் மீது கட்டப்பட்ட அணையின் ஒரு பகுதி நேற்று குண்டு வீசி தகர்க்கப்பட்டதால், கெர்சன் நகருக்குள் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இதனால், சுமார் 40 ஆயிரம் மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்ட நிலையில், மக்கள் தங்களது உடைமைகளுடன் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
கெர்சனில் உள்ள உயிரியல் பூங்காவிற்குள்ளும் தண்ணீர் புகுந்ததில், 300 விலங்குகள் நீரில் மூழ்கி இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.