அமெரிக்காவின் வளைகுடா கடற்கரையில் ஆபத்தான பாக்டீரியா இனம்
அமெரிக்காவின் வளைகுடா கடற்கரையில் ஆபத்தான பக்டீரியா இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பக்டீரியா தொற்றுக்குள்ளான மூன்று நோயாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அதே பகுதியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பக்டீரியா 50 சதவீத இறப்பு விகிதத்தை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான அறிகுறிகளைக் காட்டுவதில்லை, ஆனால் நீரிழிவு அல்லது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கோளாறுகள் உள்ளவர்கள் பாதிக்கப்படலாம் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடல் வலி அல்லது வீக்கம், காய்ச்சல், இருமல், நெஞ்சு வலி, அதிக காய்ச்சல் மற்றும் தலைவலி ஆகியவை அந்த நோயாளிகளின் பொதுவான அறிகுறிகளாகும்.
பக்டீரியா தொற்றுக்குள்ளான மூவரும் குணமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.