திரிஷாவிற்கு படம் நடிக்க குவியும் வாய்ப்புகள்!

#Cinema #Actor #Trisha #Film
Mani
3 years ago
திரிஷாவிற்கு படம் நடிக்க குவியும் வாய்ப்புகள்!

7 படங்கள் த்ரிஷா

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததைத் தொடர்ந்து த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது அவர் கைவசம் 7 படங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. த்ரிஷா நடித்துள்ள சதுரங்க வேட்டை 2 ,மற்றும் தி ரோடு ஆகிய படங்கள் முடிவடைந்து தற்போது திரைக்கு வர தயாராக உள்ளன.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. அஜீத் நடிப்பில் கவுரவ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விடாமுயற்சி அதில் அஜித் ஜோடியாகவும், நடிக்கிறார். தனுஷின் 50வது படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் படத்தில் கமல்ஹாசனுடனும் நடிக்க திரிஷாவிடம் பேசி உள்ளனர்.

 தமிழில் பிஸியான நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் த்ரிஷா. கூடுதலாக, அவர் ஒரு வெப் தொடரில் நடிக்கிறார் மற்றும் மலையாளத்தில் ஒரு படம் கைவசம் உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4