முன்னாள் ஜனாதிபதிக்கு புதிய உத்தியோகபூர்வ இல்லம்?
#SriLanka
#Sri Lanka President
#Lanka4
#இலங்கை
#லங்கா4
#ஜனாதிபதி
Mugunthan Mugunthan
2 years ago
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்டான்மோர் கிரசென்ட்டில் புதிய உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்கியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் இன்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அமைச்சர் ரமேஷ் பத்திரன, அவ்வாறானதொன்று இடம்பெறவில்லை எனவும், எவருக்கும் உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்குவதற்கு வெளிவிவகார அமைச்சருக்கு அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
எவருக்கும் உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்குவதற்கு வெளிவிவகார அமைச்சருக்கு அதிகாரம் இல்லை. உத்தியோகபூர்வ இல்லங்கள் பொது நிர்வாக அமைச்சினால் வழங்கப்படுகின்றன என அமைச்சர் பத்திரன தெரிவித்துள்ளார்.