ஆா்ப்பாட்ட பேரணியால் பிரதான வீதி மூடப்பட்டுள்ளது.
#SriLanka
#Protest
#Lanka4
Kanimoli
2 years ago
அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆா்ப்பாட்ட பேரணி காரணமாக விஜயராம சந்தியில் இருந்து ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் வரையான வீதி மூடப்பட்டுள்ளது.
பொலிஸாரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.
அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியம் உள்ளிட்ட சில தரப்பினரால் கொழும்பில் இன்று(07) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆா்ப்பாட்டம் தொடா்பில் சில முக்கிய இடங்கள் மற்றும் வீதிகளுக்குள் நுழைய நீதிமன்றால் தடை உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.