யாழ். சென்னை விமான சேவை இரு நாட்டு உறவுகளையும் வலுப்படுத்தும்: துணை தூதர்

#SriLanka #Jaffna #Flight #Chennai
Mayoorikka
2 years ago
யாழ். சென்னை விமான சேவை இரு நாட்டு உறவுகளையும் வலுப்படுத்தும்: துணை தூதர்

யாழ். சென்னை விமான சேவை 100 நாட்களை நிறைவு செய்யும் நிலையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என யாழ் இந்திய துணை தூதர் ராகேஷ் நடராஜ் ஜெபாஸ்கர் தெரிவித்தார்.

 இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான இந்தியன் ஏர்லைன்ஸ் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 நாட்கள் நிறைவடையும் நிகழ்வை கொண்டாடிய நிலையில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்,

 குறித்த விமான சேவையானது இரு நாட்டு இணைப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பது மட்டுமன்றி சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் உதவியது.

 இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதற்கும் பொருளாதார மீட்சியை சரி செய்வதற்கும் இது நாட்டு விமான சேவை வாய்ப்பாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

 2015 ஆம் ஆண்டு இலங்கை வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி "இந்தியாவுக்காக நான் கனவு காணும் எதிர்காலம் எமது அண்டை நாடுகளுக்கும் நான் விரும்பும் எதிர்காலம்" எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

images/content-image/1686133880.jpg

images/content-image/2023/06/1686133867.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!