50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற முயன்ற பிரதேச சபை செயலாளா் கைது

#SriLanka #Arrest #money #Divisional Secretariat
Prasu
2 years ago
50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற முயன்ற பிரதேச சபை செயலாளா் கைது

சூாியவெவ பிரதேச சபையின் செயலாளா் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சூாியவெவவில் வாராந்த சந்தையை நடத்திச் சென்ற ஒருவருக்கு செலுத்தப்படவிருந்த 24 லட்சம் ரூபாய் பணத்திற்கான காசோலையை வழங்குவதற்கு குறித்த செயலாளா் 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை இலஞ்சமாக கோாியுள்ளாா்.

இதனையடுத்து வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இலஞ்சம் பெற முற்பட்ட வேளை, சூாியவெவ பிரதேச சபையின் செயலாளா், இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளா் தொிவித்தாா்.

சந்தேகநபர் இன்றுஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!