கஜேந்திரக்குமார் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதி
#SriLanka
#Parliament
#Gajendrakumar Ponnambalam
Mayoorikka
2 years ago
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.
”பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரக்குமாரைக் கைது செய்வதாக பொலிஸார் எனக்கு அறிவித்தனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்.
பொலிஸார் தமது கடமைகளில் ஈடுபடுவதை நாம் தடுக்க முடியாது” என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு சபாநாயகர் பதிலளித்தார்.
"கஜேந்திரனின் கோட்பாடுகளை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் பாராளுமன்றத்திற்கு வந்து தனது கருத்துகளை முன்வைக்க அவருக்கு உரிமை இருப்பதாக நினைக்கிறோம்" என சஜித் பிரேமதாச தெரிவித்தார்